Snake Venom Milking
சுற்றுச்சூழல்

Snake venom Costs 100 Crore Indian Rupee ??

அட‌ பாம்பு விஷத்திற்கு (snake venom) இவ்வளவு விலையா ? என‌ வியந்து போனவர்கள் உண்டு. ஆனால் உண்மை. மேற்கு வங்க மாநிலத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் (poison extracted from snake) கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விஷம் முறிக்கும் மருந்தாகவும், மருந்து மாத்திரைகளிலும் பாம்பின் விஷம் பயன்படுத்தப்பட்டு வரும் பாம்பு விஷம் அதிக‌ மதிப்புள்ளது.

இதற்காக சில சமூக விரோதிகள், பாம்புகளை பிடித்து அதன் விஷத்தை எடுக்க‌ பாம்புகளை (snakes killed for venom milking) வேட்டையாடியபின் விஷத்தினைக் (snake venom) கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இவை நம் நாடில் தான் நடக்கின்றன‌. மேற்கு வங்க மாநிலம் பாராசாத் பகுதியில் ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது. பாம்பு விஷத்தை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 3 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.