சுற்றுச்சூழல்

Streets with no Plastic Bags. A Step Towards A Better Future

கடந்த ஆண்டு, ஸ்காட்லாந்து நாட்டின் தெருக்களில் இருக்கும் கடைகளில் பிளாஸ்டிக் பை ஒன்றுக்கு 5 பென்சு (5 pence) கட்டணம் வசூலிக்கவும் என்பதனை வலியுறித்தி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஸ்காட்லாந்து அரசின் இந்த‌ கண்டிப்பான‌ நடவடிக்கையின் நோக்கம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதனை ஊக்கமளிக்காது அதனை கொஞ்சம்கொஞ்சமாக‌ நிராகரிப்பதேயாகும்.

இந்த‌ நடவடிக்கையினால், ஒரே ஆண்டில் சுமார் 650 மில்லியன் பைகள் குறைவாக‌ உபயோகிக்கப்பட்டன‌ என்கின்ற‌ நல்லதொரு பலனை ஸ்காட்லாந்து அரசு பெற்றது. அரசின் இந்த சோதனையின் சிறப்பும் சிந்திக்க கூடியதும் யாதெனில், ஷாப்பிங் செய்பவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் ஒவ்வொரு 5 பென்சும் (5 pence) தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதேயாகும். இதன் காரணமாக‌ பெரும்பாலான பெரிய மளிகை கடைகளில் 80 சதவீதத்திற்க்கும் மேல் பிளாஸ்டிக் பைகள் வாடிக்கையாளர்களால் தவிர்க்கபட்டன‌.

ஏன் பிளாஸ்டிக் பைகளைத் (Plastic bags) தவிர்க்க‌ வேண்டும் ?

சந்தேகமின்றி பிளாஸ்டிக் பைகள் மலிவானதும், பயன்படுத்த எளிதானதாகவும் உள்ளது. ஆனால் எப்போதாவது நாம் அதனால் ஏற்படும் தீய‌ விளைவுகளை நினைத்திருக்கின்றோமா?.

பிளாஸ்டிக் பைகள் பெட்ரோ கெமிக்கல்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன‌. மற்ற‌ காகிதம் போலல்லாமல் அவற்றை எளிதாக மறுசுழற்சி செய்ய இயலாது.


விலங்குகள் மற்றும் கடல் உயிரினங்களுக்கு ஆபத்தானவை !

பிளாஸ்டிக் பைகள் மட்காத‌ பொருளாதலால் அவை அழுக‌ சுமார் 1000 வருடங்கள் ஆகும். அவை நீர்வழிகளுக்கு தடை செய்யும் மற்றும் கடல்வாழ் விலங்குகளை சுற்றிக்கொள்ளும். கடல்வாழ் விலங்குகள் அடிக்கடி உணவு என‌ நினைத்துக்கொண்டு அவற்றை விழுங்கவும் செய்கின்றன‌. இதனால் விலங்குகள் மூச்சுத்திணறடிக்கப்பட்டு மரணித்துப்போகின்றன‌..

மாசடைதல் மற்றும் புகைகள்

பிளாஸ்டிக் பைகள் மறுசுழற்சி செய்வது எளிதானதல்ல‌, பெரும்பாலும் அவை எரிக்கப்படுகின்றன‌. இன்றைய நிலையில் குப்பைக் கிடங்குகளில் காணப்படும் பிளாஸ்டிக்குகள் பெரும்பாலான நிலப்பரப்பை கெடுத்துவிடும் மற்றும் பேரழிவிற்கு வழிவகுக்கும்.

ச‌ணல் பைகள் அல்லது பருத்தி பைகள் போன்று சூழல்-நட்பு பைகளை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுப்படாமல் பாதுகாத்துக்கொள்வதே எதிர்காலத்திற்கு நல்லது. இதனை கடைபிடிப்பதன் மூலம் வரும் தலைமுறைகளில் சுகாதாரப் பிரச்சினைகளை குறைக்க முடியும். ஒன்று கூடுவோம். சுகாதாரமான் உலகினை உருவாக்குவோம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.