புலிகள் பாதுகாப்பு திட்டம் (Project Tiger) 1973 ல் புலிகளை பாதுகாக்க மத்திய இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். புலிகள் பாதுகாப்பு திட்டம் 1973 ல் ஒன்பது புலிகள் காப்பகத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது 16.339 சதுர‌.கி.மீ. அளவினைக் கொண்டது. தற்போது இது இருபத்து ஏழு காப்பகங்களைக் கொண்டு, 37.761 சதுர‌.கி.மீ. ஆக‌ அதிகரித்துள்ளது.

புலிகள் ஏன் அழிக்கப்படுகின்றன‌ ?,அழிகின்றன‌?

புலிகள் அழிவதற்கான காரணங்களாக

  • அதிக பணத்துக்காக வேட்டைகாரர்களால் கொல்லப்படுதல்
  • பெருகிவரும் மக்கள் தொகையால் மரங்கள் வெட்டப்பட்டு, காடுகள் அழிக்கப்படுவதால்
  • உண்ண தாவரங்கள் இன்றி மான் போன்ற புலிகளுக்கான இரைகள் அழிந்துபோவதால்
  • காட்டு எல்லையில் மனிதர்களுடனான போராட்டத்தில் மனிதனால் கொல்லப்படுதல்
  • வாழ்விடம் துண்டாடப்படுதல் அல்லது தனிமைபடுத்தப்பட்ட வாழ்விடத்தினால் ஒரு குழுவுக்குள்ளேயே ஏற்படும் இனபெருக்கத்தின் குறைவான விகிதம் மற்றும் மரபின குறைபாடுகள்

ஆகியவற்றை புலிகள் பாதுகாப்பு திட்டம் ஆராய்ந்து அதற்கான செயல் முறைகளை வகுத்தது .

இந்திய வனவிலங்குகள் வாரியத்தின் ஆலோசனையின் அடிப்படையில் 1970 ல் வனவிலங்கு வேட்டையாடல் தடை செய்யப்பட்டது. 1972 ல் வன விலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை நாற்பதாயிரமாக மதிப்பிடப்பட்டிருந்தது. 1972ல் நடத்தப்பட்ட முதலாவது அகில இந்தியப் புலிகள்தொகைக் கணக்கெடுப்பில் 1872 புலிகளே எஞ்சி இருந்தது தெரியவந்தது.

அழிவின் விளிம்பில் இருந்த புலிகளினத்தை பாதுகாக்க 1 ஏப்ரல் 1973 அன்று உத்தராஞ்சல் மாவட்டத்திலுள்ள கார்பெட் தேசிய பூங்காவில் பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாரால் ப்ராஜெக்ட் டைகர் என்னும் இத்திட்டம் துவங்கிவைக்கப்பட்டது. புலிகளைப் பேணுவதற்கு சூழிலியல் அணுகுமுறை கொண்ட ஒரு திட்டத்தை வடிவமைக்க செயலாக்கக் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. புலிகள் பாதுகாப்புப் படையும் உருவாக்கப்பட்டது.

இத்திட்டம் நடைமுறையிலிருக்கும் போதே மகாராஷ்ராவில் உள்ள பண்ணா மற்றும் ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா சரணாலயங்களில் புலிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு 1972 ஆம் ஆண்டின் தேசிய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA )ஐ சட்ட பூர்வமாக உருவாக்கியது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.