ஆரோக்கியம்

Plastic Contamination After-flood, in Chennai

வெள்ளத்தால் பெருந்துயரத்தில் இருந்து சிறிதே மீண்டு வரும் வேளையில் பிளாஸ்டிக் பொருட்களால் நாம் பாதிப்படைந்து அவதியுற்றுக்கொண்டிருக்கின்றோம். பிளாஸ்டிக் பொருட்கள் எளிமையாக‌, உடனடியாக‌ கிடைக்கப்படுவதால் அவற்றை உபயோகித்துவிட்டு தெருக்களில் வீசிவிடுகின்றனர் மக்கள். விலையில்லாத / மிகச்சிறுவிலைக்குட்பட்ட‌ களைதலுக்குரிய‌ பிளாஸ்டிக் பாட்டில்கள் (குப்பிகள்), மற்றும் பைகள் மலையள‌வில் பெரிதும் குவிந்து / குவிக்கப்பட்டு இருப்ப‌தை மழை நீர் வடிந்த‌, வற்றிப்போகாத‌ சென்னையின் பெரும்பாலான‌ தெருக்களிலும் தற்போது பார்க்க‌ முடியும்.

கடலென‌ திரண்டு காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சென்னையின் கடலோரங்களிலும், கட‌லினுள்ளும் மழை வெள்ளம் இழுத்துச்சென்றது. இந்த‌ பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரிகளை அகப்படுத்திக்கொண்டு உயிரினைப் பறித்துக் கொள்கின்றன‌.


பிளாஸ்டிக் பொருட்கள் மட்காத‌ பொருளாதலால் குவிக்கப்படும் நிலையில் அவை நீர் வடிந்துபோக‌ அனுமதிக்காமல் பெரும் சவாலாய் உள்ளன‌. மேலும் நசுக்கப்பட்ட‌ பிளாஸ்டிக் பாட்டில்கள் நீர் தேங்குவதற்கு ஏதுவாக‌ வழிவகுக்கும். இவ்வாறு எண்ணற்ற‌ பாட்டில்கள் தேக்கிய‌ நீரில் கொசுக்கள் அதன் உறைவிடமாய் ஆக்கிக்கொண்டு, முட்டையிட்டு பெருகி பெரும் காலனியை அமைத்துக் கொள்ளும் (கொல்லும்) .

இதன் விளைவு !!!!. பற்பல‌ புதுவிதமான‌ நோய்கள் தொற்றிக்கொள்கின்றன‌. சுழல் நட்பு வாய்ந்த‌ மற்றும் மறுஉபயோகத்திற்குரிய பொருட்களை உபயோகிப்போம். மட்காத‌, மாசுப்படுத்தும் பொருட்களைத் தவிர்ப்போம்.

சிந்திப்போம்! செயல்படுவோம்!... சுத்தமான‌ சென்னை .சுகாதாரமான‌ சுற்றுச்சூழல். ஆரோக்கியமான‌ மக்கள்.

சுத்தமான‌ இந்தியா !!. வாழ்க‌ பாரதம் !!!

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.