வெளியிட்ட தேதி : 12.08.2016

Greenland sharks that live 400 Years

Greenland-sharks-that-live-400-years

விஞ்ஞானிகள் நீண்டகால வாழுகின்ற‌ முதுகெலும்பி விலங்கினத்தினை (vertebrate animal) சற்றுமுன் கண்டுபிடித்து பெயரிட்டுள்ளனர். இந்த‌ உயிரினத்தினால் 400 ஆண்டுகள் வரை வாழ முடியும். இது விஞ்ஞானிகளால் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதும், பழமையானதுமான‌ இராட்சத ஆமைகள் (giant tortoises) அல்லது அம்புத்தலை திமிங்கலங்களின் (bowhead whales) ஆயுட்காலத்தினைக் காட்டிலும் இருமடங்கு ஆயுட்காலம்.

ஆம். இந்த‌ நீண்ட ஆயுளுக்கான‌ அதிபதிகள் Somniosus microcephalus (சாம்னியொசஸ் மைக்ரோசெஃபாலஸ்) என‌ பெயர்பெற்ற‌ கிரீன்லாந்து சுறாக்கள் (Greenland sharks) ஆகும்.

கிரீன்லாந்து சுறாக்கள் புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட‌ இனங்கள் இல்லை என்றாலும், அவைகளின் நம்பத்தகாத‌ நீண்ட ஆயுட்காலம் குறித்து இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

டென்மார்க், கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் (University of Copenhagen in Denmark) கடல் சார் உயிரியலாளர் ஜூலியஸ் நீல்சன் (Julius Nielsen, a marine biologist), மற்றும் சக ஆய்வாளர்கள் கொண்ட குழுவானது இந்த‌ புதிரான சுறாக்களைக் கண்டறிந்தது மட்டுமின்றி அவை 150 ஆண்டுகள் வரை முதிர்ச்சி அடைவத்தில்லை என்று கண்டுபிடித்துள்ளனர்.

மெதுவாக நீந்தும் இவ்வகை சுறாக்கள் வட அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் கடல்களின் குளிர் துருவ கடல் பகுதிகளை உறைவிடமாகக் கொண்டுள்ளன. இவற்றால் 17 அடி (20 அடி) நீளம் வ‌ரை வளர முடியும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.