சுற்றுச்சூழல்

Mysuru, Chandigarh cleanest cities in India in 2016, Dhanbad the dirtiest : Ranking by Swachh Survekshan-2016.

மைசூரு (Mysuru):கர்நாடகா; ஸ்வச் சர்வேக்ஷன் 2016படி 10 சுத்தமான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. சண்டிகர் (Chandigarh) இரண்டாவது இடத்தையும் தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி (Thiruchirapalli) மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. புது தில்லியின் முனிசிபல் கவுன்சில் NCT நான்காவது இடத்திலும், ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் ஐந்தாவது இடத்திலும், குஜராத்தின் சூரத் ஆறாவது இடத்திலும் உள்ளது. ஏழாவது இடத்தில் குஜராத்தின் ராஜ்கோட் (Rajkot) , சிக்கிமின் காங்டாக் எட்டாவது இடத்திலும், ஒன்பதாவது இடத்தில் மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வட் (Pimpri Chinchwad) மற்றும் நவி மும்பை (Navi Mumbai) பத்தாவது இடத்திலும் உள்ளது.

மொத்தம் 73 நகரங்களை கண‌க்கில் கொண்டு இந்த‌ சர்வே நடத்தப்பட்டது. ஸ்வச் சர்வேக்ஷன் 2016 (Swachh Sarvekshan-2016) முதன்மையாக ஸ்வச்பாரத் (சுத்தமான‌ இந்தியா = Swachh Bharat ) திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட‌ முயற்சியும் அதில் ஈடுபட்டதின் விளைவுகளையும் அளவிடும் நோக்கமாகும். இச்சர்வே கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை, சேவை விநியோகம் மற்றும் நடத்தை மாற்றம் தொடர்பாடல் தற்போதைய நிலை தொடர்பான உள்கட்டமைப்பு உருவாக்கம் கொண்டு முயற்சிகளின் மேற்கொண்டதன் அடிப்படையில் கனக்கிடப்பட்டதாகும். இந்த‌ மதிப்பிடல் ந‌கரங்களுக்கிடையே ஆரோக்கியம் அடிப்படையில் உத்வேகமும் போட்டியையும் ஊக்குவிப்பதே என அறிவித்தது.

கணக்கெடுப்பு படி அசிங்கமான நகரங்களாக‌ பின்வருவனவற்றை அறிவித்துள்ளது

64கல்யாண் டோம்பிவலி மகாராஷ்டிராவில்
65வாரணாசி உ.பி
66 ஜாம்ஷெட்பூர் ஜார்க்கண்ட்
67காசியாபாத் உ.பி.
68ராய்ப்பூர்சத்தீஸ்கரில்
69மீரட் உ.பி.
70பாட்னாபீகார்
71இட்டாநகர் அருணாச்சல பிரதேசம்
72ஆசன்சோல் மேற்கு வங்கம்
73தன்பாத் ஜார்க்கண்ட்