சுற்றுச்சூழல்

Indians can now check the air pollution levels in their cities with just a tweet.

இந்தியர்கள் இப்போது ஒரு ட்வீட் (tweet) செய்வதன் மூலம் தங்களது நகரங்களில் காற்று மாசுபாடு ( air pollution) குறித்த தகவல்களை நிஜநேரத்தில் பெற்றுக்கொள்ள‌ முடியும். புவி நாள் (Earth Day) அன்று டுவிட்டரால் தொடங்கப்பட்ட ஒரு புதிய அம்சமான‌ ஹேஷ்டேக் (hashtag) #Breathe பயன்படுத்தி இந்தியாவிலிருக்கும் ட்விட்டர் பயனாளர்கள் இந்த தகவலினை பெற முடியும்.

ட்விட்டர் இந்தியா, இந்தியாவில் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு, அதனால் ஏற்படும் சுகாதார விளைவுகள் பற்றி பொது விழிப்புணர்வு மற்றும் அனைவருக்கும் நேரடியாக‌ காற்று மாசுபாடு தகவல்களை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும் என‌ நம்புவதாகக் கூறுகிறது.

#Breathe

என‌ டுவீட் செய்தால் அதற்கான‌ பதில் உடனே தெரிந்து விடும். உதாரணமாக‌ #Breathe Chennai என‌ டுவீட் செய்தால் , சென்னை குறித்த‌ காற்று மாசு நிலை உலனே பதிலாகக் கிடைக்கும்.