Scientists from Nanyang Technological University in Singapore
சுற்றுச்சூழல்

Beer from Beer wastes. Beer Wastes recycled to make eco-friendly beer

பொதுவாக‌ பீர் வடித்தல் ஆலைகளில் (Beer Brewery) பீர் தயாரிப்பிற்குப் பிறகு அதிக‌ அளவிலான‌ தானியக் கழிவுகள் மிஞ்சும். விலை மதிப்பற்ற‌ இந்த‌ கழிவுகளானது பொதுவாக இயற்கை உரத்திற்காகவும் (கம்போஸ்ட் compost) அல்லது விலங்குகளுக்கு உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் இப்போது இந்த கழிவுகளை பயனுள்ளதாக மாற்றும் ஒரு வழி உள்ளது! சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலுள்ள‌ (Nanyang Technological University in Singapore ) விஞ்ஞானிகள் இந்த "பயனற்ற" தானியங்களை ஒரு ஈரமான திரவமாக மாற்றியுள்ளனர். இந்தன் மூலம் பீர் ஈஸ்ட்களை வளரவைக்க‌ முடியும். எனவே பீர் தயாரித்தலானது கழிவுகள் உருவாவதற்குப் பதிலாக‌ ஒரு சுய-புதுப்பிப்பு சுழற்சியாக இருக்கக்கூடும்.

ஈஸ்ட் நொதிக்க‌ வைக்கும் செயலுக்கு அவசியத் தேவையாகின்றது. இவை தானியங்களிலுள்ள‌ சர்க்க‌ரையினை சாராயமாக‌ மாற்றுகின்றன‌. இக்காரணத்தினால் பீர் வடித்தல் ஆலைகளுக்கு அதிக‌ அளவிலான‌ ஈஸ்ட்கள் தேவைப்படுகின்றன‌. அதிக‌ ஈஸ்ட் பெறுவதற்கு அதிக‌ உணவும் தேவை. பீர்வடித்து எஞ்சிய‌ தானியங்கள் வெறும் ஆலை நார்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. இந்த தானியங்கள் 85% சதவீத‌ கழிவுகளை உருவாக்குகின்றன.

ஆனால் இந்த புதிய செயல்முறையின் மூலம் வைக்கோலை (கழிவு) தங்கமாக சுழற்சி செய்ய முடியும் (Recycle spent grain). பயனற்ற தானியங்கள் பீர் ஆக‌ மாற்றப்பட, லிட்டருக்கான‌ காசினையும் பெறலாம்.

இந்த புதுவகையான‌ தொழில் நுட்பத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதில் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளிலுள்ள‌ மதுபான வடித்தல் நிறுவனங்கள் (Asia Pacific Breweries) அதிக‌ ஆர்வம் காட்டி வருகின்றன‌.