சுற்றுச்சூழல்

Strange looking primates in north-east Madagascar

மடகாஸ்கரின் வட-கிழக்கு பகுதிகளில் மட்டுமே காணப்படும், இந்த வித்தியாசமான‌ விலங்குகள் பார்க்க மிகவும் விசித்திரமானதகவும், ஹாலிவுட் படங்களில் பார்ப்பதைப்போன்று அற்புதம் வாய்ந்ததாகவும் உள்ளது.

Aye-aye Madagascar Primate with its long middle finger

ஐய்-ஐய் - Aye-aye (Daubentonia madagascariensis) என்றழைக்கப்படும் இவ்விலங்கு நரி போன்ற முகத்துடன், நிரந்தரமாய் வள‌ர்ந்து கொண்டேபோகும் மெல்லிய நடுவிரலுடனும் தோற்றமளிக்கும். மகத்தான விலங்குகளான‌ ஐய்-ஐய் பண்டைய மலகாஸி புராணங்களில் (ancient legends of Malagasy) மரணத்தின் சின்னமாய் (symbol of death) கருதப்படுகிறது. ஐய்-ஐய் தனது மெல்லிய‌ நீளமான‌ நடுவிரலினை எப்பொழுதுமே தனது செயல்களில் பயன்படுத்திக்கொண்டிருக்கும். இதனால் ஐய்-ஐய் விலங்கினை மக்கள் "மரணம் கூறுபவர்" ஆகக் கருதினர். மேலும் இந்த‌ விலங்கானது தனது நடுவிரலினை யாரொருவரைச் சுட்டிக்காட்டுகிறதோ அவருக்கு மரணம் நிச்சயம் என்றும் நம்பப்பட்டது. இந்த‌ காரணத்தினால் ஐய்-ஐய் (Daubentonia madagascariensis) இனத்தினை மக்கள் பார்த்த‌ உடனே கொல்லவும், இனத்தினை அழிக்கவும் துவங்கினர்.

Aye-aye Madagascar Primate

Aye-aye Madagascar Primate having its dinner

உலகினில் அழிந்துகொண்டுவரும் விலங்கினங்களுள் இந்த‌ ஐய்-ஐய் (Daubentonia madagascariensis) இனமும் ஒன்று. 1000க்கும் குறைவான‌ ஐய்-ஐய் விலங்குகள் மட்டுமே மிஞ்சியுள்ளன‌.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.