சுற்றுச்சூழல்

These animals are not affected by Cancer

உலகையே வருத்தும் கொடிய‌ நோயான‌ கேன்சர் (புற்று நோய்) நோயிலிருந்து விமோசனம் தேடும் நிலையில் ஆராய்ச்சியாளர்கள், புதுவிதமாக‌ புற்றுநோயால் பாதிக்கப்படாத‌ (அ) அரிதாய் பாதிக்கப்படும் விலங்குகளை கண்டறியும் எண்ணத்தோடு ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் யானைகள் மற்றும் ஒரு வகை எலி இனம் (naked mole-rat) புற்று நோயால் தாக்கப்படுவதில்லை எனக் கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோய் ஒரு கூட்டமான‌ செல்களில் ஏற்படும் நிலைமாற்றத்தின் அடிப்படையில் உண்டாகின்றன‌ எனவாயின் யானைகளின் உடலில் மனிதனை வில் அதிகமான‌ செல்கள் காணப்படும், இருப்பினும் சராசரியாக‌ இருபதில் ஒரு யானைக்குத்தான் கேனசர் வரும் சாத்தியங்கள் உள்ளன‌ (1 in 20 ). மனிதனில் ஐவரில் ஒருவருக்கு (1 in 5) கேன்சர் பாதிப்பு வரலாம்.


ஆகையால் அதிகப்படியான‌ செல்களுக்கும் கேன்சர் பாதிப்புக்கும் எந்த‌ சம்பந்தமும் இல்லை. ஏனெனில் அப்படியாயின் அதிக செல்களையுடைய‌ யானைகளுக்கு கேன்சர் வரக்கூடிய‌ சாத்தியங்கள் அதிகம். ஆக யானைகள் கேன்சர் நோயினால் அரிதாகப் பாதிக்கப்படுகின்றனவா ?

ஐக்கிய‌ அமெரிக்காவினைச் சேர்ந்த‌ ஆராய்ச்சியாளர் குழு ஒன்று கேன்சருடன் தொடைபுடைய‌ TP53 மரபணு (gene / ஜீன்) யானைகளிடம் அதிகமாய் உள்ளதைக் கண்டறிந்த‌னர். TP53 என‌ அழைக்கப்படும் இந்த‌ மரபணு சேதமான டிஎன்ஏ (DNA) க்களை பழுதுபார்த்து கேன்சர் பரவுவதை தடுக்கவும் செய்கின்றன‌. மனிதனிலும் காணப்படும் இந்த‌ மரபணுக்கள் யானைகளில் 20 மடங்கு அதிகமாய் காணப்படுகின்றன‌. இதுதான் யானைகளை புற்று நோய் தாக்குதலிலிருத்து காபாற்றுகிறதோ? புதிராய் உள்ளது?