Aadhaar card compulsory
கல்வி

Aadhaar made compulsory for applying for the Joint Entrance Examination (JEE).

ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது - ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (JEE - Indian Institute of Technology Joint Entrance Examination ) விண்ணப்பிப்பதற்கும் அவசியமாகிற‌து.
இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி / IIT) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி / NIT) பெற விரும்பம் உள்ளவர்கள் இச்செய்தியினைத் தெரிந்து கொள்ளுங்கள் : ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கென‌ (JEE,) தோற்றும் மாணவர்கள் இப்போது UIDAI வால் வழங்கிய ஆதார் அட்டையினை வைத்திருக்க வேண்டும் (Aadhaar card issued by the UIDAI).

JEE, வலைத்தளத்திலுள்ள‌ அறிவிப்புபடி - "JEE, (முதன்மை) 2017 க்கான‌ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்கின்ற‌ நேரத்தில் , விண்ணப்பதாரிகள் அவர்களின் ஆதார் எண், பெயர், பிறந்த மற்றும் பாலினம் ஆகியவற்றை பூர்த்திசெய்துகொள்ள‌ வேண்டும். பின்னர் இது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தரவுபடி சரிபார்க்கப் படும் (validated with the UIDAI’s data)."

மேலும் பூர்த்திசெய்யப்பட்ட‌ விவரங்கள் UIDAI, தரவுத்தளத்தில் உள்ளபடி பொருந்தவில்லை என்றால், விண்ணப்பதாரர்கள் JEE, 2017 விண்ணப்பிக்க‌ முடியாது. ஆகவே பள்ளி பதிவுகளில் உள்ள‌ உங்களது விபரங்கள் அனைத்தும் UIDAIவின் தகவலுடன் பொருத்தமானவையா என‌ சரி செய்ய மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் (Students are advised to correct mismatches in school records and the UIDAI database). பொருத்தமற்றவையை உடனே சரிசெய்துகொண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் உறுதி செய்யுமாறும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.