வெளியிட்ட தேதி : 30.12.2016
Reliance Jio Store
Commerce

Reliance Jio lists LYF phones and WiFi devices on its jio.com online portal

ரிலையன்ஸ் தனது Jio.com இணையதளத்தில் அதன் LYF ஸ்மார்ட்போன்கள் மற்றும் JioFi 4G ஹாட் ஸ்பாட் கருவிகளை பட்டியலிட்டுள்ளது. இதனால் இணையவழியாக‌ மக்கள் ஜியோ தயாரிப்புக்களை வாங்கிக்கொள்ள‌ முடியும். முன்னதாக டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் எனப்படும் ரிலையன்ஸ் இன் டிஜிட்டல் ஆஃப்லைன் கடைகள் வழியாக‌ சில்லறை விநியோகஸ்தர்களுடனான‌ ஒப்பந்த‌ அடிப்படையில் இந்த சாதனங்களை விற்று வந்தது குறிப்பிடத்தக்கது. Flipkart, Snapdeal, மற்றும் eBay போன்ற ஈகாமர்ஸ் இணையதளங்களும் ஆன்லைன் வழி lyf சாதனங்களை விற்று வருகின்றன‌.

ரிலையன்ஸ் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 4 வெவ்வேறு lyf ஸ்மார்ட்போன்களை மட்டுமே தற்போது Jio.com போர்டல் தனில் ப‌ட்டியலிட்டுள்ளது. 3-5 வணிக நாட்களில் டெலிவரி மற்றும் கருவியில் ஏதேனும் சேதம் அல்லது குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது என்றால், 7 நாட்களுக்குள் "எளிதாக மாற்றி" பெற்றுக் கொள்ளலாம்.

ரிலையன்ஸ்க்குச் சொந்தமான‌ LYF ஸ்மார்ட்போன் பிராண்ட் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து LYF சாதனங்களும் 4G LTE வசதியுடையவை. விளம்பரச் சலுகையாக‌ வரம்பற்ற இலவச அழைப்புகள் மற்றும் தரவு என‌ Jio தனது 4G வணிக சேவையை செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இந்த சலுகை மார்ச் 2017 வரையிலும் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் அதன் ஆண்ட்ராய்ட் ஆப் ஸ்டோரில் காணப்படும் My Jio app வழியாக‌ ஜியோ சிம்கார்டை வீட்டிற்கே விநியோகம் செய்து வருகிறது. பயனர்கள் ஆதார்-அடிப்படை நெட்வொர்க் வழி அடையாளம் சரிபார்ப்பு செய்து தங்களை அங்கீகரிக்க முடியும்.டிசம்பர் 31க்குள், 100 நகரங்களில்,Jio சிம்களை வீட்டில் விநியோக செய்யவுள்ளதாக‌ அறிவித்ததும் குறிபிடத்தக்கது..

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.