பிளிப்கார்ட் 100 மில்லியன் பயனர் கிளப்பில் இணைகிறது

Flipkart has more than 100million registered users and joins 100 million user club

பிளிப்கார்ட் (Flipkart) 100 மில்லியன் பயனர் கிளப்பில் இணைகிறது. 6 மாத்ங்களுக்கு முன்னர் 75 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்த‌ பிளிப்கார்ட், 100 மில்லியனுக்கும் அதிகமான‌ பதிவு செய்த பயனர்களை (100 million registered users) பெற்றுள்ளதாக‌ கூறுகிறது.

நிறுவனத்தின்படி, அதன் பயனர் அடிப்படையானது 63% இந்தியாவின் வயர்லெஸ் இணைப்புகள் ம‌ற்றும் கம்பி இணைப்புக் கொண்ட பிராட்பேண்ட் இணைப்புகளிலிலிருந்து (broadband connections) அணுகப்படுகிறது என‌ கூறுகிறது. ஜனவரி 2015 மற்றும் டிசம்பர் 2015 இடையே அதிக‌ பொருட்கள் வாங்கியவர்களில் 50 மில்லியன் பேர், ஒற்றையாக‌ இருக்கும் ஆண் மற்றும் ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவராக‌ இருந்தனர் என்று கண்டறியப்பட்டது. 25-34 வயதில் உள்ள‌ மக்கள் ஒரு பெரிய அளவில் ஷாப்பிங் (shopping) செய்துள்ளனர், அதனைத் தொடர்ந்து 15-24 வயது, 35-44 மற்றும் 44 க்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் அதிகமாக‌ பொருட்கள் வாங்கியுள்ளனர்.

இதுவரை 100 மில்லியன் பயனர்கள் கிளப்பில் இணைந்த‌ நிறுவனங்கள்:

Paytm , 100 மில்லியன் பயனர்கள் கடந்து ஒவ்வொரு மாதமும் 75 மில்லியன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுகின்றனர் என‌ கூறியிருந்தது.
மைக்ரோசாப்ட் இன் லிங்க்ட்இன் (Microsoft LinkedIn) ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் 100 மில்லியன் பயன்ர்கள் மற்றும் இந்தியாவில் 37 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் தொடங்கப்பட்ட பேஸ்புக் லைட் (Facebook Lite), மார்ச் மாதத்தில் 100 மில்லியன் பயனர்களைக் கடந்தது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம், ஹைக் மெசஞ்சர் (Hike Messenger) 100 மில்லியன் பதிவு செய்த பயனர்களைக் கடந்தது மற்றும் 40 பில்லியன் செய்திகளை பெறுகின்றது என‌ கூறியுள்ளது.

நாள் : 22.09.2016 திருத்தம் : 22.09.2016

புதியவை / Recent Articles