வீடு மனை

Amazon Pantry, a new service from Amazon India

அமேசானின் புதிய‌ யுக்தி அமேசான் பான்ட்ரி (Amazon Pantry). இச்சேவை குறிப்பிட்ட‌ இடங்களில் மாத்திரமே!!.

அமேசான் இந்தியாவின் புதிய முயற்சியான‌ அமேசான் பான்ட்ரி (Amazon Pantry) அடுத்த நாளிலேயே மளிகை மற்றும் வீட்டு பொருட்களை (Household things) விநியோகம் செய்கிறது. முன்முயற்சியான‌ இந்த‌ சேவை தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே தற்போது கிடைக்கிறது. இப்போது இச்சேவை ஹைதெராபாத் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமேசான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெங்களூரில் கிரானா நௌ (KiranaNow) எனும் உள்ளூர் மளிகை சேவையினைத் துவங்கியது.

அமேசான் பான்ட்ரி சேவையின் வாயிலாக‌ அமேசான் பான்ட்ரி லோகோ பதிக்கப்பட்ட‌ பொருட்களை 15 கிலோ வரை வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். அமேசான் இந்த‌ பொருட்களை 3 கன அடி (அல்லது 15 கிலோ) வரை நிரம்பக்கூடிய‌ ஒரு பெட்டியில் இந்த பொருட்களை பேக் டெய்து அனுப்புகிறது. இந்த‌ பேக்கிங்கின் விநியோக செலவு ரூ .20 இனை அமேசான் வ‌சூலிக்ககின்றது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.