ஆன்லைனில் பழைய‌ புத்தகம் வாங்கலாம் : அமேசான் இந்தியா

Amazon India's used book store for easy book shopping online

அமேசான் இந்தியா, இப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாட்டினில் (Mobile App) பயன்படுத்திய புத்தகங்களை (Used Book store from Amazon India) வாங்க ஒரு தனிப்பட்ட ஸ்டோரினை ஆரம்பித்துள்ளது.

பழைய‌ புத்தக‌ ஸ்டோரில் தற்போது 100,000 க்கும் மேற்பட்ட தலைப்புகள் (Book Titles) சலுகைகளுடன் உள்ளது. பயன்படுத்திய புத்தகங்கள் ஸ்டோரில், ப‌யன்படுத்திய-போன்ற புதிய (Used-Like New), பயன்படுத்திய-நல்ல (Used-Good) மற்றும் பயன்படுத்திய-ஏற்கக்கூடிய (Used-Acceptable) வகையென‌ நிலை அடிப்படையில் தரப்படுத்தி (Book for sale by grade) விற்பனைக்காக‌ உள்ளன‌. இந்த தகவல் பழைய‌ புத்தகங்களை வாங்கும் அனைத்து வாடிக்கையாளருக்கும் காண்பிக்கப்படும்.

புத்தகங்களை விற்க விரும்பும் மக்கள் அமேசானில் மற்ற‌ பொருட்களைப் போல‌ நேரடியாக (Cannot directly Sell used books as like other products) அதை விற்க இயலாது. ஆக‌ பழைய‌ புத்தகங்கள் பட்டியலிடப்பட்ட‌ மற்றும் மெய்யான‌ போலியற்ற‌ பொருட்கள் (Genuine seller) விற்கும் அமேசான் விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே விற்பனையாகின்றன‌. 9400 விற்பனையாளர்கள் (Currently 9400 Used Book Sellers) தனது விற்பனை மேடையில் புத்தகங்களை விற்கின்றனர் என‌ அமேசான் கூறுகிறது.

வெளியீட்டு சலுகையாக‌ (Launch offer), ஒரே விற்பனையாளரிடமிருந்து ரூ 399 மேலாக பயன்படுத்திய புத்தகங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஷிப்பிங் (விநியோகம், Free Shipping for cunsumers who buys book for more than Rs.399) வழங்கப்படும்.

தற்போது இலக்கியம் (Literature), காதல் (Romance), சுயசரிதை (Biography) மற்றும் பாடப்புத்தகங்கள் (Text Books) என‌ பயன்படுத்திய புத்தக ஸ்டோரில் நான்கு பிரிவுகள் உள்ளன.

நாள் : 11.08.2016 திருத்தம் : 18.08.2016

புதியவை / Recent Articles