Amazon Prime Air! இன் முதல் டோர் டெலிவரி சேவை துவங்கியது

Amazon's first successful Prime Air drone delivery
Commerce

Amazon Prime Air Delivers the first parcel in United Kingdom via Drones Fly

இ-காமர்ஸ் / ஆன்லைன் வழியாக வியாபார (E-commerce, Online selling platform) சேவையை வழங்கிவரும் அமேசான் நிறுவனம் (Amazon) தனது சேவையின் ஒரு பிரிவாக டோர் டெலிவரி (Amazon door delivery) எனப்படும் வீட்டிற்கே பொருட்களை கொண்டு செல்லும் சேவையையும் வழங்கி வருகின்றது.

அமேசான் நிறுவனம் ட்ரோன் வகை விமானங்களைப் பயன்படுத்தி டோர் டெலிவரி (Home delivered through Drones) செய்யும் சேவையினை சோதிப்பதற்கான முன்னோட்ட நடவடிக்கைகளை சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்திருந்தது.

இப்போது அமேசான், Amazon Prime Air! எனும் முற்றிலும் ட்ரோன் வகை விமான வழி டோர் டெலிவரி சேவைதனை ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் செய்யப்படும் ஆர்டர்களை (Goods Ordered Online) 30 நிமிடங்களில் அல்லது அதற்கு குறைவான நேரத்தில் வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுக்கக்கூடிய வகையில் குறித்த இச்சேவையானது செயல்புரியும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான பயனர்களுக்கு பார்சல் டெலிவரி சேவையை (Amazon’s Parcel delivery service) வழங்கி வருகின்ற அமேசான் நிறுவனத்தின் இந்த புதிய சேவை மேலும் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்னும் சில நாட்களில், இச்சேவையினை அமெரிக்கா, ஆஸ்திரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளிலும், தொடர்ச்சியாக ஏனைய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நாள் : 22.12.2016 திருத்தம் : 09.01.2017