கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில்

வெளியிட்ட தேதி : 25.07.2018
Meenakshi-Amman
ஆன்மீகம்

Kondai mudi alangarithu song lyrics - Raksha Raksha Jagan Matha

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து ‍ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா : மீனாட்சி அம்மன் பாடல் வரிகள். Kondai mudi alangarithu song by P Susheela lyrics Somu Gaja / Devi Songs Tamil Lyrics

கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே,
சுந்தரேசர் மகிழும்... மயிலே
கதம்ப...வனக்குயிலே
மாதவர் போற்றும் எழிலே
பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே

கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து

கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்
அந்த அழகிய மாநகர் மதுரையிலே......மதுரையிலே
மதுரையிலே......மதுரையிலே

வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்
வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்
வானவர் பூமாரி பொழிந்திடவே
சிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்
மீனாட்சி வந்தாள் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)

தேனமர் சோலையாம் கதம்பவனம்
அங்கு வானளாவும் தங்க கோபுரம் எங்கும் காணும்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.