midnight-sun at finland
பூமி

Do you know the countries that are up for 24 hours without sunset?

காலையில் உதிக்கும் சூரியன் மாலை வேளையில் மறைந்து விடுவது இயல்பு. அனைத்து உயிர்களுக்கும் சூரியனே சாட்சி என்றார்போல் சூரியன் உதய‌ அஸ்தமனத்தை கணக்கில்கொண்டு எல்லா உயிர்களும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன . அறிவியல் கோட்பாடுகளின் படி இப்படி நடப்பது தான் வழக்கம்.

ஆனால் சில நாடுகளில் சூரியன் மறையாது 24 நான்கு மணி நேரமும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. இதைப்பற்றி தெரியுமா ? மாலை 6 முதல் 7 என‌ அந்தி சாயும் வேளையில் வானத்தில் கருமை நிறத்தினைப் பார்த்து பழகிய நமக்கு பகல் பன்னிரெண்டு மணி போல சுரீரென்று வெயில் அடித்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

எந்தெந்த நாடுகளில் இரவுகளில் சூரியன் தெரிகிறது தெரியுமா?

நார்வே

ஆர்டிக் சர்கிளில் அமைந்திருக்கிறது நார்வே. நடுஇரவு சூரியனுக்கு என்று இந்த ஊர் ரொம்பவே பிரபலம். இங்கே இரவு வேளையில் சூரியனைக் காணவே பல்வேறு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். நார்வே பற்றிய‌ மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா?. சுமார் 100 ஆண்டுகள் முழுவதுமாக‌ சூரியனே தெரியாமல் இருட்டாகவே இருந்திருக்கிறது. ஆ..... !!!

ஃபின்லாந்து

ஃபின்லாந்து நாட்டில் கோடைக் கால ஆரம்பத்தில் சூரியன் உதிக்கிறது. அதன்பிறகு 73 நாட்கள் கழித்துதான் மறைகின்றது. தொடர்ச்சியாக‌ 73 நாட்களும் சூரியனை நம்மால் பார்க்கமுடியும்.

அலஸ்கா

பனிக்கட்டிகள் நிறைந்து காணப்படும் இடம் இது. மே முதல் ஜூலை வரை சுமார் 1440 மணி நேரங்கள் இங்கே பகலாகத் தான் இருக்கும். இந்த காலத்தில் சூரியன் மறையவே மறையாதாம். என்ன‌ !!

ஐஸ்லாந்து

இங்கே மே முதல் தேதியில் இருந்து ஜூலை கடைசி தேதி வரையில் சூரியன் தெரிந்து கொண்டேயிருக்கும். கோடைகாலங்களில் நடு இரவில் தான் சூரியன் மறையும் மீண்டும் அதிகாலை மூன்று மணிக்கு சூரியன் உதித்திடும். என்னடா இது தூக்கமே இல்ல‌ போலிருக்கு???

கனடா

கனடாவின் கோடைக்காலங்களில் 50 நாட்கள் சூரியன் மறையாமல் இருக்கும்.

ஸ்வீடன்

இங்கே நடு இரவில் சூரியன் மறைந்து அதிகாலை 4.30 மணிக்கே சூரியன் உதித்து விடும். மே முதல் ஆகஸ்ட் வரையில் இப்படித் தான்.