தொழிலில் உயர : புதன் கிழமை அன்று புதன் பகவான் வழிபாடு
வாராவரம் வருகின்ற புதன் கிழமைகளில் புதன் பகவானை வணங்கி அவருக்குரிய காயத்ரி மந்திரம்தனை 1,008 அல்லது 108 முறை ஜெபித்து வர அவர் நன்மைகளை வாரி வழங்குவார். நினைத்த காரியத்தை நடத்தி தருவார் என்பது ஐதீகம்.
புதன் கிழமை அன்று புதன் பகவானை வழிபாடு செய்துவந்தால் தொழிலில் உயரலாம் என்பது நம்பிக்கை. வாராவரம் வருகின்ற புதன் கிழமைகளில் புதன் பகவானை வணங்கி அவருக்குரிய காயத்ரி மந்திரம்தனை 1,008 அல்லது 108 முறை ஜெபித்து வர அவர் நன்மைகளை வாரி வழங்குவார். நினைத்த காரியத்தை நடத்தி தருவார் என்பது ஐதீகம்.
புதன் காயத்ரி மந்திரம்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்;
எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலும் புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசி மாதமாகும்
புதன் தலம்
திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.
புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர். சந்திரனின் மைந்தன் புதன். இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம். புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது.
புதன் கிழமைகளிலும் புதனுக்குரிய ரேவதி, அவிட்டம் நட்சத்திர நாட்களிலும் இந்த காயத்ரி மந்திரத்தை மனதார சொன்னால் வீட்டில் நல்லது நடக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
புதன் ஓரை
இதேபோல், புதன் கிழமைகளில் புதன் ஓரையில் வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரவல்லது. புதன் கிழமையன்று புதன் ஓரை என்பது காலை 6 முதல் 7 மணி வரையும் பின்னர் இரவு 8 முதல் 9 மணி வரையும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது
ஆகையினால் புதன் கிழமைகளில், புதன் ஓரைகளில், வீட்டில் விளக்கேற்றி, புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால், கல்வியில் சிறந்துவிளங்கலாம். தொழில் செய்பவர்கள், வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாறி, லாபம் பெருகும். திருமணத்தடைகள் நீங்கும். சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நம்புங்கல் : புதன் காயத்ரி மந்திரம் கூறி வழிபடுங்கள்.
உங்கள் கருத்து : comment