அனுமன் ஜெயந்தி குறித்த தகவல்கள். Hanuman Jayanti

அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபட்டால், சிவனையும், பெருமாளையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். மேலும் அனுமன் ஜெயந்தியில் அனுமனைத் வணங்கினால், இதுவரை சந்தித்த துன்பங்கள் மற்றும் தொல்லைகள் நீங்கும். நன்மைகள் தேடி வரும்.

அனுமனுக்கு உங்கள் கையால் வெற்றிலை மாலையை தொடுத்து போட்டால் நினைத்தது நடக்கும். வேண்டுதல் பலிக்கும்.

ஹனுமான் ஜெயந்தி (Hanuman Jayanti)

மார்கழி மாதம் என்று சொன்னாலே சிறப்பு தான். இந்த மார்கழி மாதத்திற்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில், நாளைய தினம் அனுமன் ஜெயந்தியும் சேர்ந்து வருகின்றது. ஹனுமன் என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது ராமாயணம் தான். அனுமனைப் போல ஒரு ஸ்ரீராம‌ பக்தனை இந்த உலகத்தில் காண முடியாது என்று எம்பெருமானே பாராட்டியுள்ளார்

பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்குவதில்லை. ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார். அவர் அவதரித்த நாளில் ராம நாமம் ஜெபித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
அஞ்சனையின் மைந்தன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் அனுமன் பிறந்த நாள் தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமரின் தீவிர பக்தரான அனுமன், ராமாயண காவியத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தவர். இவர் வலிமை, அறிவு, துணிச்சல், புகழ், வீரம், ஆரோக்கியம், சாதுர்யம் என அனைத்தையும் தன்னுள் கொண்டவர். இவ்வளவு திறமைகளை கொண்ட அனுமன் மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபட்டால், சிவனையும், பெருமாளையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். மேலும் அனுமன் ஜெயந்தியில் அனுமனைத் வணங்கினால், இதுவரை சந்தித்த துன்பங்கள் மற்றும் தொல்லைகள் நீங்கும். நன்மைகள் தேடி வரும். அனுமன் ஜெயந்தி வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ் நாட்காட்டியின் படி, 2022 ஜனவரி 02 ஆம் தேதி மார்கழி அமாவாசையும், மூல நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் அன்று அனுமன் ஜெயந்தி தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.

அனுமனை பூஜிக்கும் முறை

வானளாவிய பெருமைகளைக் கொண்ட ராம பக்தரான அனுமனின் ஆசீர்வாதத்தை பெற ஹனுமான் ஜெயந்தி அன்று சுலபமான முறையில் அனுமன் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது.

ஸ்ரீராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அனுமன் உணவுப்பிரியர். நன்றாக சாப்பிடுவார் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

வீட்டில் அனுமனை பூஜிக்கும் முறை

சில பக்தர்கள் வீட்டிலேயே அனுமனுக்கு பூஜை செய்து பிராத்தனைகளை செய்வார்கள். அப்படி பூஜை செய்யும் போது, அனுமனுக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் மெது வடை ஆகியவற்றை படைப்பார்கள். அதோடு அனுமனை பூஜிக்கும் போது, அவருக்கான ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றும் அனுமன் சாலிசா போன்றவற்றை பாடினால் சிறப்பு.

மேலும் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் என்பது ஐதீகம்.

பூஜை அறையில் அனுமனின் திருவுருவப்படம் இருந்தால் அதை சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து கட்டாயம் இரண்டு துளசி இலைகளை அனுமனுக்கு பூஜையில் வைக்க வேண்டும். அதன்பின்பு வெற்றியைத் தரும் வெற்றிலை பூஜைக்கு அவசியம் தேவை. 11, 21 என்ற ஒற்றைப்படை கணக்கில் உங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை வெற்றிலைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் செந்தூரமும் நமக்குத் தேவை. செந்தூரத்தில் தண்ணீர் ஊற்றி கலந்து, மோதிர விரலால் அந்த செந்தூரத்தை தொட்டு, வெற்றிலையின் நடுவே ‘ராம’ என்ற வார்த்தையை எழுதி வெற்றிலையைச் சுருட்டி மாலையாகக் கட்டி, உங்கள் வீட்டில் இருக்கும் அனுமனின் திருவுருவப் படத்திற்கு போடலாம். அனுமனின் திரு உருவப்படம் வீட்டில் இல்லை என்றால், ராமபிரான் திருவுருவப் படத்திற்கு இந்த மாலையை போட்டு வழிபாடு செய்யலாம். எந்த படமும் வீட்டில் இல்லாதவர்கள் இந்த மாலையை அப்படியே பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள்.

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment