ஆதார் பே எனும் புதிய பணமளிப்பு முறையை இந்திய அரசு தொடங்க உள்ளது
111 கோடி ஆதார் அட்டைகள் பதிவாகி உள்ள நிலையில் இந்திய அரசு ஆதார் பே எனும் புதிய பணமளிப்பு முறையை (Aadhaar Pay Payment Mechanism) தொடங்க உள்ளது. வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் எண் பயன்படுத்தி எந்த ஒரு நபரும் அவரது கைரேகையினை மட்டுமே பயன்படுத்தி பணம் செலுத்த மற்றும் / பணம் பெறவும் முடியும்.
நாட்டில் ஆதார் சேர்க்கையின் எண்ணிக்கை 111 கோடி கடந்துள்ளது. இது நாட்டின் மக்கள் தொகையில் 98% உள்ளடக்கியது ஆகும். (2013 இல் மக்கள் தொகை, 125 கோடி என்ற அளவில் இருந்தது) .
ஆதார் பே (Aadhaar Pay) ஆதார் இயக்கப்பட்ட பேமெண்ட் சிஸ்டம் (AEPS) போன்றது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். AEPS என்பது இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் (NPCI) உருவாக்கிய நிதிச் சேவை தயாரிப்பு ஆகும். AEPS ஆதார் அங்கீகாரத்தை வைத்து வங்கியின் வணிக நிருபர் மூலம் பணம் எடுக்கவும், டெபாசிட் மற்றும் POS (MicroATM) பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்யவும் அனுமதிக்கின்றது.
ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கையானது தற்போது 39 கோடியாக உள்ளது என இந்திய மின்னணு, ஐ.டி. அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது, 14 வங்கிகள் இந்த ஆதார் பே முறைக்காக பதிவுப்பெற்றுள்ளது. விரைவில் இச்சேவை தொடங்க உள்ளதாக இந்திய ஐ.டி. மற்றும் மின்னணு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் கூறியுள்ளார்.