வெளியிட்ட தேதி : 08.07.2014
ஆன்மீகம்

Prathakshana Stotra

பொதுவாக எந்தக் கோவிலை வலம் வந்தாலும் அல்லது சந்நிதிகளை சுற்றி வந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு சுற்றிவருவது விசேஷமாகும்.

யாநி காநிச பாபாநி ஜன்மாந்த்ர கிருதாநிச!
தாநி தாநி ப்ரணச்யந்தி பிரதட்சிண பதே பதே!

"பல ஜென்மங்களில் செய்த பாவங்கள கோவிலை பிரதட்சணம் செய்வதால் விலகும்" என்பது இதன் பொருள்.

பிரதட்சணம் செய்யும் போது நிதானமாக அடிமேல் அடிவைத்து நடக்க வேண்டும்.

கோவில்களையோ அல்லது தெய்வ சந்நிதிகளையோ பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்.

மூன்று முறை வலம் வந்தால் :- இஷ்ட சித்தி அடையலாம்.
ஐந்து முறை வலம் வந்தால் :- வெற்றிகள் கிட்டும்.
ஏழு முறை வலம் வந்தால் :- நல்ல குணங்கள் பெருகும்.
ஒன்பது முறை வலம் வந்தால் :- நல்ல புத்திர பாக்கியம் கிட்டும்.
பதினோரு முறை முறை வலம் வந்தால் :- ஆயுள் பெருகும்.
பதின் மூன்று முறை முறை வலம் வந்தால் :- செல்வம் பெருகும்.
நூற்றியெட்டு முறை வலம் வந்தால் :- அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.