வெளியிட்ட தேதி : 15.10.2013

கற்றைவார் சடையன் பெற்ற கற்றைவார் சடையன் நீயே!
நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே!
பெற்றவன் தமிழைப் பெற்றான் பிள்ளைநீ தமிழ் வளர்த்தாய்!
கொற்றவன் அவன் இமயம் குடமுனி பொதிகை வேந்தே!
வேந்தன் நீ என்பதால் என் வேதனை தவிர்க்க கேட்டேன்!
மாந்தர்தம் துயர் துடைத்தல் மன்னனின் கடமை அன்றோ!
பூந்தமிழ் வளர்த்த செல்வ புலவர்நற் குல முதல்வ!
சாந்தநற் குருவே நின்தாள் சரணென அடைந்தேன் காவாய்!
காவாயேல் என்னை ஈங்கு காத்திட எவருமில்லை!
நாவாயு புயலிற் சிக்கி தவித்தற்போல் தவிக்கின்றேன் நான்!
பேய் வாயினின்றும் மீட்ட பெருமானே என்றும் தாயாய் இருந்தே காப்பாய்!
தலைவைத்தேன் நினதுதாளே சரணம்!!!
“ஒம் அகத்திசாய நம”

மருந்தறியேன் மணியறியேன் மந்திரமொன்றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன்.
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன், மனமடங்கும் திறத்தினி லோரிடத்தே,
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்த அறிவேனோ,
இருந்த திசை சொலவறியேன் எங்கனம்நான் புகுவேன்.
யார்க்குரைப்பே னென்னசெய்வேன் ஏதுமறிந்திலனே.
“ஓம் அகத்தீசாய நம”

“அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேட மீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்குந் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே”

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.