வெளியிட்ட தேதி : 08.07.2014
ஆன்மீகம்

Namaskar and types of Namaskar

கடவுள் வழிபாட்டில் கடவுளை மனதார‌ வணாங்குவதும்ந கைகூப்பி நமஸ்கரிப்பதும் வழக்கம். ந‌மஸ்காரம் என்பது அஷ்டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம், திரியங்க நமஸ்காரம், ஏகாங்க நமஸ்காரம் என்று நான்கு வகைப்படும்.

அஷ்டாங்க நமஸ்காரம்

மார்பு, தலை, நெற்றி, இரு கால்கள், இரு புஜங்கள், கைகள், இவைகள் நிலத்தில் படும் படி படியாக செய்யும் நமஸ்காரம் அஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.

பஞ்சாங்க நமஸ்காரம்

தலை, இரு கைகள், இரு முழங்கால்கள், இவைகள் நிலத்தில் படும் படி படியாக செய்யும் நமஸ்காரம் பஞ்சாங்க நமஸ்காரம் எனப்படும்.

திரியங்க நமஸ்காரம்

இருகரங்களையும் தலைக்குமேல் கூப்பி தலை வணங்கி செய்யும் நமஸ்காரம் திரியங்க நமஸ்காரம் எனப்படும்.

ஏகாங்க நமஸ்காரம்

தலையை மாத்திரம் தாழ்த்தி வணங்குவது ஏகாங்க நமஸ்காரம் எனப்படும்.புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.