கந்த புராணம்
கந்த புராணம் பாடல் வரிகள். கச்சியப்ப சிவாச்சாரியார் (கச்சியப்ப முனிவரால்) ஆல் அருளப்பட்டது. Kandha Puranamm of Kachchiyappa Chivachariyar Tamil Songs Lyrics
கந்த புராணம் முருகப் பெருமானின் (முருகனின்) பெருமையைக் கூறுவது. இது மகா புராணங்களில் ஒன்றாகும். கச்சியப்ப சிவாச்சாரியார் (கச்சியப்ப முனிவரால்) ஆல் அருளப்பட்டது. 10,345 விருத்தப் பாக்களைக் கொண்டு ஆறு காண்டங்களாக அமைந்துள்ளது கந்த புராணம்.
கந்த புராணம் விளக்கம்
கந்த புராணம் என்பது கந்தனுடைய (முருகர்) பழைய வரலாற்றை உரைப்பது எனும் பொருள்படுகிறது. கந்த புராணத்தில் உலகில் உள்ள சமய உண்மைகள், மதக் கொள்கைகள் யாவும் அடங்கி உள்ளன. ஆகையினால் "கந்தபுராணத்தில் உள்ள பொருள் வேறு எந்த புராணத்திலும் இல்லை" என்ற பழமொழி வழங்கலாயிற்று.
இது முதல்வன் புராணம் எனவும் வழங்கப்பெறும். ஞானப்பண்டிதன் மும்மலங்களைக் கொன்று ஆன்மாக்களாகிய தேவர்களை பந்தத்தினின்றும் விடுவித்தார் என்பதே கந்த புராணத்தின் உட்கதை.
கந்தன் என்பதன் விளக்கம் : கந்த புராண நோக்கில் கந்தன் என்ற சொல்லுக்கு "ஒன்று சேர்க்கப்பட்டவன்" என்பது பொருளாகும். ஆறு முகங்களூம், பன்னிரண்டு கரங்களும் கொண்ட முருகன் திருக்கோலமே "கந்தன்" என்ற கந்தபுராணக் கருத்தாகும்.