அதிகாலையில் பாலனைத் தேடி
அதிகாலையில் பாலனைத் தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி கிறிஸ்து பிறப்பு பாடல்கள் வரிகள். Athikalayil Palanai Thedi Selvom Naam Yavarum Koodi Jesus Birth Christian Songs Tamil Lyrics.
அதிகாலையில் பாலனைத் தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி,
தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்…
அதிகாலையில் பாலனைத் தேடி…
வாரீர்… வாரீர்… வாரீர்…
நாம் செல்வோம்
1.அன்னை மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட,
விரைவாக நாம் செல்வோம் கேட்க… - அதிகாலையில்
2.மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
உன் சிந்தை குளிர்ந்திட போற்று
நல் காட்சியை கண்டிட நாமே… - அதிகாலையில்