Smartphones for sale
Gadgets

Data privacy: India Government asks 21 smartphone manufacturers to share security information

இந்திய‌ அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், முன்னணி சீன பிராண்டுகளான‌ (Chinese mobile phone brands) விவோ, ஓப்போ, சியோமி மற்றும் ஜியோனி உள்ளிட்ட 21 கைபேசி (மொபைல் ஃபோன் - mobile phones) தயாரிப்பாளர்களிடம், எவ்வாறு டேட்டா பாதுகாக்கப்படுகிறது மற்றும் சேமிக்கப்பட்ட‌ டேட்டாவானது எவ்வாறு பத்திரப் ப‌டுத்தப்பட்டு உறுதி செய்யப்படுகிறது (ow they secure data and ensure its safety and security) குறித்த "விரிவான, கட்டமைக்கப்பட்ட எழுத்துபூர்வமான பதிலை" வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் பல‌ நாட்டினைச் சார்ந்த‌ ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் சீன ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய நாட்டில் அதிக‌ மவுசு. அதிகமாக விறப்பனையும் ஆகின்றன‌. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் சேமிக்கும் தகவல்கள் எந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது மற்றும் அவை மிகவும் பாதுகாப்பு கொண்டவையா அல்லது இல்லையா (Chinese mobiles data security and privacy ??) என்பது குறித்து மத்திய அரசு இப்போது கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவில் சீன ஸ்மார்ட்போன்கள் தான் அதிக அளவில் விற்பனை ஆகின்றன‌. லெனோவா, ஆப்பிள் ஐபோன்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை அவற்றில் சேமிக்கும் பல தகவல்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது, மேலும் அவற்றின் செயல்முறையை குறித்து உடனடியாக விளக்கும் அளிக்குமாறு மத்திய அரசு 21 மொபைல் ஃபோன் தயாரிப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


இந்திய‌ மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் இது குறித்து விளக்கம் அளிக்கும்படி கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

.

ஆகஸ்ட் 28 ம் திகதி தேதிக்குள் அனைத்து நிறுவனங்களும் தங்கள் பதில்களை வழங்குமாறு அமைச்சகம் நேரத்தை வழங்கி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உத்திரவிட்டுள்ளது.