CSS
Cascading Style Sheets (CSS) (அ) விழுத்தொடர் பாணித் தாள்கள் (சி.எசு.எசு) என்பது ஒரு வலைப்பக்கத்தின் உள்ளடக்கத்தை எப்படி தோற்றிவிப்பது என வரையறை செய்யும் குறியீட்டு மொழி ஆகும். ஒரே வலைப்பக்கத்திற்கு வெவ்வேறு தோற்றத்தை இலகுவாக தெரிவு செய்யவும் அல்லது முழு வலைதளத்தின் தோற்றத்தினை மாற்றவும் இவை ஏதுவாகின்றன.
முதல் CSS பதிப்பு, World Wide Web Consortium (W3C) த்தால் டிசம்பர் 1996ல் பரிந்துரைக்கப்பட்டது. 1998ல் வெளிவந்த CSS2, வடிவமைப்பாளர்கள் எதிர்பார்த்த பல புது அம்சங்களை கொண்டு வெளிவந்தது.
CSS3 வேலை பல ஆண்டுகளாக நடக்கிறது, ஆனால் மிகவும் மெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. CSS3 பல module களாக (தொகுதிகள் ஆக) பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் CSS3 குறிப்பீட்டின் பல அம்சங்களை ஏற்கனவே அனைத்து உலாவிகளும் செயல்படுத்தி வருகின்றன.