Home » computer » Programming Language » HTML

எச்.டி.எம்.எல் (HTML) அல்லது மீசுட்டு மொழி என்பது வலைதளப் பக்கங்களை (Web Pages) வடிவமைக்க‌ பயன்படுத்தப்படும் ஒரு அடிப்படை குறியீட்டு மொழி ஆகும். உலகின் முதல் வலைப்பக்கங்கள் எழுதப்பட்ட மொழி எச்.டி.எம்.எல் (HTML) ஆகும். இன்றும் எச்.டி.எம்.எல் (HTML) மொழி பெரும்பாலான‌ வலைப் பக்கங்களுக்கும், பின்னர் வந்த பல மொழிகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. எச் டி எம் எல் கோப்புக்கள் (files) .html அல்லது .htm கோப்பு நீட்சி (file extension) கொண்ட கோப்புக்களாக அமையும்.

HTML மற்றும் CSS தரத்தை பராமரிக்கும் அமைப்பான W3C வெளிப்படையான விளக்க HTML க்கு பதில் CSS ஐ பயன்படுத்த ஊக்குவிக்கிறது

HTML பதிப்புகள் காலவரிசை

நவம்பர் 24, 1995 HTML 2.0 வெளியிடப்பட்டது.
ஜனவரி 1997 HTML 3.2 W3C பரிந்துரையாக வெளியிடப்பட்டது.
டிசம்பர் 1997 HTML 4.0 W3C பரிந்துரையாக வெளியிடப்பட்டது.
ஏப்ரல் 1998 HTML 4.0 பதிப்பு எண் அதிகரிக்கப்படாமல் சிறிய தொகுப்புகளுடன் மீண்டும் வழங்கப்பட்டது.
டிசம்பர் 1999 HTML 4.01 W3C பரிந்துரையாக வெளியிடப்பட்டது. அது HTML 4.0 கொண்டிருந்த அதே மூன்று வேறுபாடுகளை கொண்டிருந்தது.
ஜனவரி 2008 HTML5 W3C மூலம் ஒரு பணி வரைவு பதிப்பாக வெளியிடப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.