Gears

x640 and x86 processors in computer

32 பிட் மற்றும் 64 பிட் (CPU) என்பது ஒரு கணினியின் பிராசஸர் தகவல்களை கையாளும் விதத்தினை குறிக்கும்.உங்கள் கணிணியில் எந்த‌ பிராசஸர் இருக்கிறது என்பது விஷயமே இல்லை, ஆனால் நீங்கள் OSஇன் எந்த‌ பதிப்பினை உபயோகிக்கிறீர்கள் என்பது மிக‌ முக்கியமானது.

உதாரணம்

32 பிட் விண்டோஸ் ஒரு 64 பிட் பிராசஸர் கொண்ட‌ கணிணியில் நன்றாக இயங்கும். நீங்கள் ஒரு 64 பிட் பிராசஸர் கொண்ட‌ கணிணியில் 32 பிட் பதிப்பினை கொண்ட‌ விண்டோஸ் OSயை இயக்கினால் நீங்கள் விண்டோஸ் (x86) என்ற ** 32 பிட் ** பதிப்பினை கொண்ட‌ சேவை பேக்கினையே (service pack) நிறுவ‌ வேண்டும்; உங்கள் பிராசஸர் 64 பிட்டாக‌ இருந்தாலும் கூட‌.

பிராசஸர் என்பது அனைத்து கணிணிக்கும் பொதுவானதாகும். அதில் எந்த‌ OS உபயோகித்தாலும் அதன் பிராசஸர் பதிப்பினைத் தழுவியே OS நிறுவப்படும். ஒரு கணிணியில் உள்ள‌ இயக்கமுறைமையில் (OS) , x86 என்பது OSஇன் 32 பிட் பதிப்பாகும், மற்றும் x64 என்பது OSஇன் 64 பிட் பதிப்பு ஆகும்.

நீங்கள் புதிதாக‌ ஒரு மென்பொருள் கருவியை உங்கள் கணிணியில் நிறுவும் போது அக்கருவியின் பதிப்பு உங்கள் கணிணி பதிப்பிற்கு ஒத்து போகுமா என‌ அறிந்து பதிவிறக்கம் செய்யவும்.


processor-x86-windows-x64bit-processor

சரி உங்கள் கணிணியில் எந்த‌ பதிப்பு, விண்டோஸ் 32 பிட்டா அல்லது 64 பிட்டா நிறுவப்பட்டிருக்குறது என்பதனை எப்படி கண்டறிவது ?

விண்டோஸ் XP (Windows XP) கணிணி

ஸ்டார்ட் ஐ கிளிக் செய்து அதில் வரும் மை கம்ப்யூட்டர் மெனுவை றைட் கிளிக் செய்யுங்கள், பின் அதில் வரும் பிராப்பர்ட்டீஸ் ஐ கிளிக் செய்யுங்கள் அல்லது உங்கள் டெக்ஸ்டாப்பிற்கு சென்று மை கம்ப்யூட்டர் ஐக்கனை றைட் கிளிக் செய்யுங்கள், அதில் வரும் பிராப்பர்ட்டீஸ் ஐ கிளிக் செய்யுங்கள். இப்போது சிஸ்டம் பிராப்பர்ட்டீஸ் (system properties) டயலாக் விண்டோ திரையில் காண்பிக்கப்படும். click Start, right-click My Computer, and then click Properties.

x64 பதிப்பாக‌ இருந்தால் பிராப்பர்ட்டீஸ் டயலாகில் உள்ள‌ சிஸ்டம் டாபில் நீங்கள் விண்டோஸ் 64பிட் பதிப்பினைதான் (64-bit version of Windows XP) பயன்படுத்துகிறீர்கல் என‌ காண்பித்துவிடும். If "x64 Edition" is listed under System, you’re running the 64-bit version of Windows XP.

நீங்கள் பிராப்பர்ட்டீஸ் டயலாகில் உள்ள‌ சிஸ்டம் டாபில் நீங்கள் விண்டோஸ் 64பிட் பதிப்பினை பார்க்க‌ இயலவில்லையெனில் உங்கள் கணிணி விண்டோஸ் 34பிட் பதிப்பினை (34-bit version of Windows XP) சார்ந்தது என்பது உறுதியாகிவிடும். If you don’t see "x64 Edition" listed under System, you’re running the 32-bit version of Windows XP.

விண்டோஸ் 7 (Windows 7) (அ) Windows விஸ்டா கணிணி ( Windows Vista)

ஸ்டார்ட் பொத்தானை கிளிக் செய்து அதில் வரும் கம்ப்யூட்டர் மெனுவை றைட் கிளிக் செய்யுங்கள், பின் அதில் வரும் பிராப்பர்ட்டீஸ் ஐ கிளிக் செய்யுங்கள். இப்போது சிஸ்டம் பிராப்பர்ட்டீஸ் (system properties) டயலாக் விண்டோ திரையில் Windows edition என்ற‌ தலைப்பின் கீழ் காண்பிக்கப்படும். Click the Start button Picture of the Start button, right-click Computer, and then click Properties.

உங்கள் OS 64 பிட் பதிப்பா அல்லது 32 பிட் பதிப்பா என்பதனை இந்த‌ டயலாக் விண்டோவில் எழுத்து வடிவில் காண்பிக்கப்படும்.
If "64-bit Operating System" is listed next to System type, you’re running the 64-bit version of Windows Vista or Windows 7. If "32-bit Operating System" is listed next to System type, you’re running the 32-bit version of Windows Vista or Windows 7. The edition of Windows Vista or Windows 7 you're running is displayed under Windows edition near the top of the window.

OS - Operating System
CPU - central processing unit

*சுருக்கம், விரிவுரை

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.