கிறிஸ்து அரசே,இரட்சகரே, மகிமை, வணக்கம், புகழ் உமக்கே குருத்தோலைத் திருவிழா பாடல் வரிகள். Kristu Arase Ratchagare Mahimai Vanakkam pukazh umakke - Christian Devotional songs for Palm Sunday Day
கிறிஸ்து அரசே,இரட்சகரே, மகிமை, வணக்கம், புகழ் உமக்கே:
எழிலார் சிறுவர் திரள் உமக்கு அன்புடன் பாடினர்: "ஓசான்னா!"
எல். கிறிஸ்து அரசே.....
பாடகர்: இஸ்ராயேலின் அரசர் நீர், தாவிதின் புகழ்சேர் புதல்வர் நீர்,
ஆசிபெற்ற அரசே நீர் ஆண்டவர் பெயரால் வருகின்றீர்.
எல். கிறிஸ்து அரசே,....
பாடகர்: வானோர் அணிகள் அத்தனையும் உன்னதங்களிலே உமைப் புகழ்
அழிவுறும் மனிதரும் படைப்புகளும் யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே.
எல். கிறிஸ்து அரசே,....
பாடகர்: எபிரேயர்களின் மக்கள் திரள் குருத்துகள் ஏந்தி எதிர்கொண்டார்;
செபமும் கீதமும் காணிக்கையும் கொண்டு யாம் இதோ வருகின்றோம்.
எல். கிறிஸ்து அரசே.....
பாடகர்: பாடுகள் படுமுன் உமக்கவர் தம் வாழ்த்துக் கடனைச் செலுத்தினரே:
ஆட்சி செய்திடும் உமக்கன்றே யாம் இதோ இன்னிசை எழுப்புகின்றோம்.
எல். கிறிஸ்து அரசே.....
பாடகர்: அவர்தம் பக்தியை ஏற்றீரே, நலமார் அரசே, அருள் அரசே,
நல்லன எல்லாம் ஏற்கும் நீர் எங்கள் பக்தியும் ஏற்பீரே.
எல். கிறிஸ்து அரசே.....