வெளியிட்ட தேதி : 15.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

உயிருள்ள கற்களாய்
இணைத்து ஒன்றோடு ஒன்றாய்
கட்டுகின்றார் வாழ்வு தந்தவர்

ஒரு கல்லை படியாக அமைத்திடவே
மறுகல்லை பலி பீடமாக்கிடவே
கிழித்து நொறுக்கி உடைத்து எடுத்து
தகுதியான இடத்தில் வைத்து
கட்டுகின்றார் வாழ்வு தந்தவர்

என் நாமம் சொல்லவே தூளாகுதே
பாறையான கல் அது உறுதியானதே
தம் இஷ்டக் கைவினையாய் தம் மேனி திரு உருவாய்
கட்டுகின்றார் வாழ்வு தந்தவர் -- ( உயிருள்ள கற்களாய் )

அன்பனே அந்த கல் நீ தான் என்றே
அறிந்தே முழுதும் உன்னை தந்திடு என்றே
வெற்றி சிறந்த இடத்தில் உன்னை திரும்ப
ஜொலிக்க வைத்திடவே
கட்டுகின்றார் வாழ்வு தந்தவர் -- ( உயிருள்ள கற்களாய் )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.