வெளியிட்ட தேதி : 15.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக
என்னில் வா என் மன்னவா - ( 3 )

நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும்
துணையாளன் நீயல்லவா - ( 2 )
எனை நாளும் பிரியாமல் உயிரோடு உயிராக
இணைகின்ற என் மன்னவா - ( 2 )

முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி
மூன்றாகி ஒன்றானவா - ( 2 )
இனிதாகக் கனிவாக அருள்வாழ்வின் நிறைகாண
எனைத் தேர்ந்த என் மன்னவா - ( 2 )

நிலம் வாழ நீராகி மலர் வாழ ஒளியாகி
நலம் சேர்க்கும் என் மன்னவா என் - ( 2 )
உளமென்னும் மலர் வாழ அன்பென்னும் மனம்நழ்கும்
இளந்தென்றல் நீயல்லவா - ( 2 )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.