வெளியிட்ட தேதி : 30.06.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

உம்மையல்லால் இந்த உலகிலே
எனக்கு யாருண்டு இயேசு நாதா
உம்மையல்லால் இந்த உலகிலே
எனக்கு யாருண்டு இயேசு நாதா
உம்மையல்லால் இந்த உலகிலே
எனக்கு யாருண்டு இயேசு நாதா

உம் வசனம் என் வாழ்விலே
வெளிச்சமும் தீபமும் நாதா
உம் வசனம் என் வாழ்விலே
வெளிச்சமும் தீபமும் நாதா
காரிருள் வேளையில் நடைக்கையிலே - ( 2 )
கலங்கரை விளக்கம் ஐயா - எனக்கு
கலங்கரை விளக்கம் ஐயா - (உம்மையல்லால்)

உம் சமுகம் என் வாழ்விலே - என்றும்
மகிழ்ச்சியும் ஆனந்தமைய்யா
உம் சமுகம் என் வாழ்விலே - என்றும்
மகிழ்ச்சியும் ஆனந்தமைய்யா
உம் வல பரிசத்தை நினைக்கையிலே - ( 2 )
பேரின்பம் பொங்குதையா - எனக்கு
பேரின்பம் பொங்குதையா - (உம்மையல்லால்)

கண்மணி போல் என்னை காத்து - உம்
செங்கோட்டைக்குள் மறைத்துக் கொள்ளும்
கண்மணி போல் என்னை காத்து - உம்
செங்கோட்டைக்குள் மறைத்துக் கொள்ளும்
என்னை தொடுவேன் என் கண்மணியை - ( 2 )
தொடுவதாய் சொன்னீரல்லொ இயேசு ஐயா
தொடுவதாய் சொன்னீரல்லொ - (உம்மையல்லால்)

நீதியிலே நான் உம் முகத்தை
தரிசித்து ஸ்தோத்தறிப்பேன்
நீதியிலே நான் உம் முகத்தை
தரிசித்து ஸ்தோத்தறிப்பேன்
காலையில் கண்விழிக்கும் நேரத்திலே
காலையில் கண்விழிக்கும் நேரத்திலே - உந்தன்
சாயலால் திருப்தியாவேன் அல்லேலூயா
சாயலால் திருப்தியாவேன் - (உம்மையல்லால்)


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.