வெளியிட்ட தேதி : 15.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

புகலிடமே உம்மைத் தேடுகிறேன்
வாழும் நாட்களிலெல்லாம்
ஏங்குதே ஏங்குதே என் உள்ளம்
என் இயேசுவே காணவே

வாழ்கையின் நோக்கமும் புரியவில்லை
போகும் இந்த பாதையும் தெரியவில்லை
நதியை கண்ட மான்போல
நானும் வந்தேன் உம் பாதம்
தாய் மடியைக் கண்ட சேய்போல
நானும் சேர்வேன் உம் பாதம் -- ( புகலிடமே )

துரத்திடும் மாயையான உலகிலே
கானல் நீரென வாழ்கையில் தவிக்கிறேனே
தஞ்சம் தஞ்சம் நீர் எனக்கு
தரணியை மீட்ட என்னவரே
ஆசையெல்லாம் மாய்ந்திடுமே
நித்தம் சேர்ந்தால் உம் பாதம் - ( 4 ) -- ( புகலிடமே )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.