வெளியிட்ட தேதி : 03.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் - ( 2 )

நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே
நின் சித்தம் போல் உம் கரத்தால் - ( 2 )
நித்தம் வழிநடத்தும் - ( 2 )

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க
பரிசுத்தமான உம் இரத்தத்தால் - ( 2 )
பரிசுத்தமாக்கி விடும் - ( 2 )

வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம்
வாருமய்யா வந்து என்னை - ( 2 )
வல்லமையால் நிரப்பும் - (2)


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.