வெளியிட்ட தேதி : 15.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

நினைக்கின்றேன் உம்மையே
என்றென்றும் இயேசுவே
சரிவாகிப் போனது இந்த
உலக ஆசையே

படரும் கோடி போல நானும்
இணைவேன் உம்மோடு என்றும்
நீர்தானே எனக்கெல்லாம் நீர்தானே -- ( நினைக்கின்றேன்...உலக ஆசையே )

புல்லைப் போன்ற இந்த வாழ்க்கை
உலர்ந்து போகும் சிக்கரமே
மேன்மையான பதவியும் புகழும்
பூவைப் போல வதங்கிடுமே

உம்மையே தந்ததால்
உம்மிலே நான் தேங்கினேன்
வாழ்விலே எந்நாளுமே
கால்கள் இடறாமல் நீர் ....காத்தீர் -- ( நினைக்கின்றேன்...உலக ஆசையே )

அன்பு செய்தீர் ஜீவன் தந்தீர்
அடிமை வாழ்க்கை நீக்கி விட்டீர்
உலக துன்பம் வாட்டின போதும்
நினைவில் என்றும் நீர்தானே

உம்மையே தந்ததால்
உம்மிலே நான் தேங்கினேன்
வாழ்விலே எந்நாளுமே
கால்கள் இடறாமல் நீர் ....காத்தீர் -- ( நினைக்கின்றேன்...உலக ஆசையே )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.