வெளியிட்ட தேதி : 15.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

நான் சுகமானேன் நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால்

ஆ….. அல்லேலூயா ஆனந்தமே
ஆ….. அல்லேலூயா ஆரோக்கியமே

பிள்ளையின் அப்பம்
பிள்ளையான எனக்கல்லோ –- ( ஆ….. அல்லேலூயா )

என் நோய்கள் தீர்த்தார்
சாபமான சிலுவையில் –- ( ஆ….. அல்லேலூயா )

நான் ஏன் சுமப்பேன் -- எந்தன்
இயேசு சுமந்த பின் – ( ஆ….. அல்லேலூயா )

யேகோவா தேவன்
எந்தன் நல்ல பரிகாரி -- ( ஆ….. அல்லேலூயா )

பரிபூர்ண ஜீவன்
பரநிந்த ஜீவனிது -- ( ஆ….. அல்லேலூயா )

இயேசுவின் இரத்தம்
பிணி போக்கும் நல மருந்து -- ( ஆ….. அல்லேலூயா )

பலவீனன் அல்ல
பலவான் நான் தேவன் சொன்னார் -- ( ஆ….. அல்லேலூயா )

ஆயத்தமானேன்
இயேசு ராஜன் வருகைக்கு -- ( ஆ….. அல்லேலூயா )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.