வெளியிட்ட தேதி : 15.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

காணும் கண்கள் எனக்குத் தாரும்
உம்மை நான் காண வேண்டும்
கேட்கும் செவிகள் எனக்குத் தாரும்
கேட்டுப் புரிந்திடணும்

வழியோர விதையாக அல்ல
பயன்படும் நிலமாக மாற்றும்
நூறு மடங்கு நன்மை என் வாழ்வில் தோன்றிடச் செய்யும் -- ( காணும் கண்கள் )

பாறை நிலமாக அல்ல
பலன் தரும் நிலமாக மாற்றும்
நூறு மடங்கு நன்மை என் வாழ்வில் தோன்றிடச் செய்யும் -- ( காணும் கண்கள் )

முட்செடி விதையாக அல்ல
நலம் தரும் செடியாக மாற்றும்
நூறு மடங்கு நன்மை என் வாழ்வில் தோன்றிடச் செய்யும் -- ( காணும் கண்கள் )

நல்ல நிலமாக மாற்றும்
நன்மையால் உள்ளம் செழிக்க
நூறு மடங்கு நன்மை என் வாழ்வில் தோன்றிடச் செய்யும் -- ( காணும் கண்கள் )

கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.