வெளியிட்ட தேதி : 15.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு - அதை
அவருக்கு கொடுத்திடுவோம் - ( 2 )

வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காய் நாம் வாழ்ந்திடுவோம்

இயேசுவும் தனக்காய் வாழாமல் - அவர்
நமக்காய் தானே வாழ்ந்தாரே
உயிரையும்கூட நமக்குதந்தாரே
இதற்கு பதிலாய் என்ன செய்வோமே
நாமும் வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய் -- ( ஜீவனுள்ள )

ஊழியம் செய்வது பாக்கியமே - அதின்
பலனோ இன்று நாம் அறியோமே
கர்த்தர் ஒர் நாள் வந்திடுவாரே
அன்று இதன்பலன் கொண்டு வருவாரே
கண்டு மகிழ்ந்திடுவோம் துள்ளிடுவோம் -- ( ஜீவனுள்ள )

யாரோ செய்யட்டும் எனக்கென்ன - நான்
நலமாய் இருந்தால் அது போதும்
என்றே சுயமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
என்று உணர்வாயோ இன்றே வா

உலகத்தையே சொந்தமாக்கினாலும்
அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ
அதுவே உனக்கு உதவிடும் என்றும்
ஓயாது உழைத்திடுவோம் இயேசுவுக்காய்


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.