வெளியிட்ட தேதி : 01.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

இனிய மலரே இன்ப இயேசுவே
ஏக்கத்தோடு நோக்கிப் பார்த்தேன்
இனிய மலரே இன்ப இயேசுவே
ஏக்கத்தோடு நோக்கிப் பார்த்தேன்

லீலிமலரிலும் அழகு நிறைந்தவர் - ( 2 )
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என் நேசர் இயேசுவே ஆஹா என் இன்பமே - ( 2 )
( இனிய மலரே )

வெடித்த மாதுளை உந்தன் கன்னங்கள்
அழகு இதழ்கள் லீலிமலர்கள்
அன்பென்னை தேற்றுமே ஆறுதல் ஊட்டுமே
( இனிய மலரே )

ஒழி மிகு சிவந்த மேனியுமானவர்
பதினாயிரம் பேரில் தனித்து தோன்றுவர்
இவரே என் நேசர் இவரில் நான் மகிழ்வேன்
( இனிய மலரே )

தலையோ பசும்பொன் கேசமோ சுருள் சுருள்
நதிநீர் ஓரம் தங்கும் புறா அதன் கண்கள்
இவர் கவின் அழகிலே அனுதினம் வாழ்வேன்
( இனிய மலரே )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.