வெளியிட்ட தேதி : 15.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

என் உயிரே என் பெலனே
என் உணர்வே என் இயேசுவே - ( 2 )
எங்கெங்கும் எந்நாளும் இருப்பவரே
அக்கினி அபிஷேகம் அளிப்பவரே - ( 2 )

மகிமை தேவ மகிமை கிருபை எங்கும் கிருபை - ( 4 )

கர்த்தர் உமக்கு நிகர் யாருமில்லை
உம் அன்புக்கு நிகர் ஏதும் இல்லை - ( 2 )

நேசிக்கிறேன் நேசிக்கிறேன்என் நேசரையே
பாடிடுவேன் பாடிடுவேன் என் இயேசுவை

மகிமை தேவ மகிமை கிருபை எங்கும் கிருபை - ( 2 )

நேசரே எனக்கு சொந்தமானீர்
நீர் எனக்கு துணையானீர்
வல்லவரே நல்லவரே நீர் உயர்ந்தவரே
நல்லவரே நல்லவரே என் சிநேகிதரே

மகிமை தேவ மகிமை கிருபை எங்கும் கிருபை - ( 4 )

சேனையின் கர்த்தர் நீர் தானே
மகிமையின் ராஜா நீர் தானே - ( 2 )
வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் என் கர்த்தரையே
போற்றுகிறேன் போற்றுகிறேன் என் மீட்பரையே

மகிமை தேவ மகிமை கிருபை எங்கும் கிருபை - ( 4 )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.