வெளியிட்ட தேதி : 01.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

தெய்வம் இயேசு பேசுவார்
கலக்கம் நீங்க பேசுவார்
தெய்வம் இயேசு பேசுவார்
கலக்கம் நீங்க பேசுவார்
உன் உள்ளத்தில் பேசுவார்
உறவாடி உன்னோடு மகிழ்ந்துடுவார்
உன் உள்ளத்தில் பேசுவார்
உறவாடி உன்னோடு மகிழ்ந்துடுவார் - ( தெய்வம் இயேசு... )

ஏக்கத்தோடு தேடி வந்தாள்
ஆர்வத்தோடு நாடி வந்தாள்
கர்த்தர் உடலை கல்லறையில் காணவில்லை
ஏக்கத்தோடு தேடி வந்தாள்
ஆர்வத்தோடு நாடி வந்தாள்
கர்த்தர் உடலை கல்லறையில் காணவில்லை
திகைப்புடன் நின்ற மகதலேனாவை
ஆண்டவரே பெயர் சொல்லி அழைத்து நின்றார்
சீடருக்கு சாட்சியாய் அனுப்பி வைத்தார்
ஆண்டவரே பெயர் சொல்லி அழைத்து நின்றார்
சீடருக்கு சாட்சியாய் அனுப்பி வைத்தார் - ( தெய்வம் இயேசு... )

கலக்கமான சூழ்நிலையில் நம்பமுடியா நேரத்திலே
எம்மாவுஸ் சீடர்களுக்கு தோன்றினார்
கலக்கமான சூழ்நிலையில் நம்பமுடியா நேரத்திலே
எம்மாவுஸ் சீடர்களுக்கு தோன்றினார்
தாம் உயிரோடுள்ளதை அறிந்திட செய்தார்
உள்ளங்களில் அக்கினி எழும்பிட செய்தார்
தாம் உயிரோடுள்ளதை அறிந்திட செய்தார்
உள்ளங்களில் அக்கினி எழும்பிட செய்தார்
சாட்சியாக அவர்களை திகழ்த்திட செய்தார் - ( தெய்வம் இயேசு... )

அமைதியான நேரத்திலே ஆண்டவரின் பாதத்திலே
இயேசுவே உன்னருகில் தோன்றுவார்
மெல்லிய குரலில் பேசுவார்
சத்தியங்களை உனக்கு போதிப்பார்
சாட்சியாக உன்னை நிறுத்திடுவார் - ( தெய்வம் இயேசு... )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.