வெளியிட்ட தேதி : 01.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

ஆர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

அனைத்தும் கிறிஸ்துவுக்கே எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழு தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே

என் எண்ணம் போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்டார் யாருமில்லை
உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொருங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் -- ( அனைத்தும் )

ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெரும் காயங்கள் ஏற்ற நாதா
வான் பூவிக் கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர் -- ( அனைத்தும் )

என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பனி சிறந்திட முற்றும் தந்தேன் -- ( அனைத்தும் )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.