வெளியிட்ட தேதி : 01.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்

1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் -- ( ஆராதனை )

2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே -- ( ஆராதனை )

3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் -- ( ஆராதனை )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.