Automobiles

Worlds Top Car Manufacturers List

சர்வதேச அளவில், உலக ஆட்டோமொபைல் துறையினை, சில மாபெரும் நிறுவ‌னங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் த‌ங்களுக்கென‌ தனி பாணி, செயல்திறன் மற்றும் சீரான‌, பாதுகாப்பான மற்றும் கம்பீரமான உலகத்தரம் வாய்ந்த உயர் தரத்தில், உலகம் முழுவதும் உள்ள‌ கோடிக்கணக்கான தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஊர்திகளை தயாரித்து வழங்குகிறது.

வோல்ஸ்வேகன் குரூப்

உலகளவில் அரை மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் கொண்டும் விற்பனையிலும் மேலான இடம் வகிக்கும் வோல்க்ஸ்வேகன் குரூப் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் பிராண்ட்களுள் ஒன்றாகும்.

ஆடி, பென்ட்லி, புகாட்டி, லம்போர்கினி, ஸ்கோடா போன்ற‌ பிரம்மாண்டமான‌ பிராண்ட்கள் வோல்க்ஸ்வேகன் குரூப்பின் துணை பிராண்ட்களாகும்.

டொயோட்டோ மோட்டார் நிறுவனம்

டொயோட்டோ மோட்டார் நிறுவனம் கார் உற்பத்தி, விற்பனையுடன் உதிரி பாகங்கள், சேடான், சிறிய வேன்கள், SUV க்கள் மற்றும் டிரக்குகள், தயாரிக்கும் ஒரு முன்னோடி நிறுவனம் ஆகும்..

லெக்ஸஸ் மற்றும் சியோன் டொயோட்டோ மோட்டார் நிறுவனத்தின் துணை பிராண்ட்கள் ஆகும். மேலும் 320.000 தொழிலாளர்களின் பணிபுரியும் நிறுவனம் ஆகும்.

டைம்லர்

டைம்லர் ஏஜி உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. அதன் பிரிவுகளான‌ மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள், டெய்ம்லர் டிரக்குகள் மற்றும் டைம்லர் பைனான்சியல் சர்வீசஸ் என‌ முதல் தர‌ கார்கள் மற்றும் சுமையுந்து வாகனங்களின் தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களாக‌ விளங்குகிறது.

ஃபோர்டு மோட்டார்

உலகம் முழுவதும் விற்பனை கொண்ட மிகவும் பிரபலமான மற்றும் பெரிய கார் உற்பத்தியாளரான ஃபோர்டு, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளில் அதன் விற்பனை மற்றும் சேவை மையங்களை அமைத்துக் கொண்ட‌ பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளகளுள் ஒன்றாகும். உல்லாசப்பேருந்து, எரிபொருள் சேமிப்பு கார்கள், வலுவான டிரக்குகள் போன்ற‌ உயர் தரமான தானியங்கிகளை(ஊர்திகளை) ஃபோர்டு தயாரித்து வருகிற‌து.

ஹோண்டா மோட்டார்

BMW குரூப்

ஜெனரல் மோட்டார்ஸ்

நிசான் மோட்டார்

ஹூண்டாய் மோட்டார்

ரெனால்ட்

ரெனால்ட் 118 நாடுகளில் சந்தையில் பெயர்பெற்ற‌ முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுள் ஒன்றாகும். 2.5 மில்லியன் மேல் வாகனங்கள் விற்பனை மற்றும் 130,000 ஊழியர்கள் கொண்டு உலகம் முழுவதும் அறியப்படுகிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.