பணம் முதலீடு

First Pizza ATM Opens at Xavier University

அமெரிக்காவின் சேவியர் பல்கலைகம்ழகம் உலகின் முதல் பீஸ்ஸா வழங்கும் ஏ.டி.எம் யை அறிமுகப்படுத்தியுள்ளது. 3 நிமிடத்தில் பீஸ்ஸா வழங்கும் ஏ.டி.எம் இல், டெபிட், கிரெடிட் மற்றும் ஸ்டூடண்ட் கார்டுகளைப் பயன்படுத்தி பீஸ்ஸா வாங்கிக்கொள்ளலாம்.

ஏ.டி.எம் பயன்படுத்தி பணம் எடுப்பதை மட்டுமே அறிந்த‌ நாம், புதுவிதமாய் அமெரிக்காவின் சேவியர் பல்கலைகழகம், பீஸ்ஸா விற்பனைக்காக ஏ.டி.எம் இயந்திரத்தை பயன்படுத்த‌ அறிமுகப்படுத்தியுள்ளது ஒரு வித்தியாசமான‌ முன்னோடி தன்மையாக‌ உள்ளது.

தொடு திரையினால் ஆன திரைகளைக் கொண்ட‌ பீஸ்ஸா இயந்திரம் நமக்குத் தேவையான பீஸ்ஸா வகையினை தெரிவு செய்து ருசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்படும் பிஸ்ஸாவானது அடுப்புக்குள் (Owen / ஓவன்) க்குள் சென்று 3 நிமிடத்தில் ரெடியாகி துண்டு துண்டாக இயந்திரத்தால் ந‌றுக்கப்பட்ட பிறகு நமது கையில் வந்து சேரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. .

24 மணி நேரமும் இயங்கும் இந்த பீஸ்ஸா ஏ.டி,எம் இயந்திர சேவையானது, ஒரு பிஸ்ஸாவிற்கு தலா 10 அமெரிக்க டொலர்கள் மட்டுமே என‌ பயன்பாட்டிற்கு ஏற்கனவே வந்துள்ளது.