பணம் முதலீடு

Verizon in a deal has agreed to pay $4.8 billion to acquire Yahoo Inc

யாகூவை (Yahoo), வெரிஸான் (Verizon) நிறுவனம் வாங்குகிறது. வெரிஸான் தொலைதொடர்பு (Verizon Communications) நிறுவனம் யாகூ நிறுவனத்தை 4.8 பில்லியன் (480 கோடி / $4.8 billion) டாலருக்கு வாங்கவுள்ளது. ஒரு காலத்தில் இணையத்தின் இராஜாவாய் திகழ்ந்த‌ யாகூ 2000 ஆண்டுகளின் துவக்கம் வரை ஆதிக்கம் செலுத்தி வந்தது. அப்போதுதான் கூஃகிள் தனது காலடியினை பதித்து சிறிது முன்னேற்றம் கண்டறிந்த‌ நேரம். 2000ம் வருடத்திற்குப்பிறகு யாகூ தனது வணிக‌ விஷயங்களில் சரிவினைக் கண்டது. யாகூவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது.

ஒரு கட்டத்தில் விற்பனை செய்ய‌ வேண்டிய‌ நிலைக்கு வந்தது யாகூ. பல‌ ஏலங்களுக்கிடையில் வெரிஸான் நிறுவனம் யாகூ நிறுவனத்தை 483 கோடி டொலர் கொடுத்து வாங்குவதாக‌ அறிக்கைகள் வெளியாகியுள்ளன‌. யாகூ கொடிகட்டிப் பறந்த‌ காலகட்டத்தில் 12,500 கோடி ($125 பில்லியன்) டாலர் வரை விலை பேசப்பட்டது. ஆனால் யாகூ முன்வரவில்லை.

மேலும், கடந்த 2008ம் ஆண்டு மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் 4.400 கோடி டாலர் கொடுத்து யாகூ நிறுவனத்தை விலைக்கு கேட்டது. ஆனால் யாகூ நிறுவனம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வெரிஸான் யாகூ ஒப்பந்தம் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யாகூ வரும் காலாண்டில் சில‌ வணிக நிறுத்தங்கள் (stop business) செய்யும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக‌ அறிவித்துள்ளது. யாகூவின் ஆட்டோ (Yahoo Auto), விளையாட்டு (Yahoo Sports), ரியல் எஸ்டேட் (Yahoo Real Estate) மற்றும் ஸ்மார்ட் டிவி (Yahoo Smart TV) போன்றவை ஏற்கனவே நிறுத்தம் செய்யப்பட்டன.

Verizon in a deal has agreed to pay $4.8 billion to acquire Yahoo Inc.