Ola Cabs
பணம் முதலீடு

Ola and Mahindra to provide vehicle loans with a financing worth $400M to ola driver partners.

ஓலா (Ola), கடன்மீது வாகனங்கள் வழங்க (vehicles on loans) வாகன உற்பத்தியாளர் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் (Mahindra & Mahindra Ltd ) உட‌ன் கைகோர்த்திருக்கின்றது. ஓலா $ 400 மில்லியன் (~ ரூ .2,600 கோடி) மதிப்புள்ள நிதி மூலம் 40,000 ஓட்டுநர் பார்ட்னர்களுக்கு கடன் வழங்க‌ உள்ள‌து.

இரு நிறுவனங்களும் டிரைவர்களுக்கென்று "மஹிந்திரா-ஓலா" நிதி தொகுப்பினை வழங்க கூட்டணி ஏற்படுத்தியுள்ளன‌. "மஹிந்திரா-ஓலா" ( “Mahindra-Ola”) நிதி மூலம் டிரைவர்கள், மஹிந்திரா பிராண்ட் கார்களை ( Mahindra brander cars), பூஜ்ய உடனடி செலுத்தப்படும் தொகை (zero down payment ), மானிய காப்பீடு பிரிமியம் (subsidized insurance premium), மற்றும் வாகன பராமரிப்பு தொகுப்புகள் ( vehicle maintenance packages) என‌ வெவ்வேறு விலையில் கடனாய் பெற்றுக்கொள்ளலாம்.

ஓலாவின் 400 மில்லியன் மதிப்புள்ள நிதியானது, ஒரு காரினில் முதலீடு செய்ய‌ இயலாமல் இருக்கும் தனது ஓட்டுநர் பார்ட்னர்களை ஊக்குவிப்பது என்பதை இலக்காக கொண்டதென‌ ஓலா கூறுகிறது.

இந்த‌ நிதி தொகுப்பானது (ஃபைனான்ஸ் பேக்கேஜ் / financing package ) டிரைவர்களுக்கு விபத்து காப்பீடு (accident insurance) மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப் போன்றவற்றிற்கு வழி செய்யும்.

தற்போது ஒலா நிறுவனம் 450,000 இற்கும் மேற்பட்ட வாகனங்களை - கார்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா உட்பட 102 தனது சேவையினை வழங்குகிறது என‌ கூறுகிறது.