Software

Image Credit : MicrosoftMicrosoft's new video streaming service "Stream" for businesses

Microsoft launches video stream service similar to YouTube

Microsoft launched Stream, a new video streaming service for business videos with an idea to give businesses that want to share video internally like the one that YouTube offers to consumers.Stream like the other video streaming services will allow users to follow a channel, like videos and share them via email, and embed videos on webpages.

மைக்ரோசாப்ட் யூடியூப் போன்ற வீடியோ சேவையினைத் (video streaming service) துவங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் (Microsoft) "ஸ்டிரீம் (Stream)" எனும் புதிய வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையினை வணிக நிறுவனங்களுக்காகவும் மற்றும் நிறுவன ஊழியர்களுக்கு உதவும் நோக்கோடும் நிறுவியுள்ளது.

ஸ்ட்ரீம் பயனர்கள் வீடியோக்களை பதிவேற்றம் (upload video) செய்ய அனுமதிக்கும். மேலும் ஒரு டீம் (அணிகள்/ Team), குரூப் (குழுக்கள் / Groups) என‌ தலைப்புகள் அடிப்படையில் ஒரு சேனலினை ஏற்படுத்திக்கொள்ள‌ (create channels) முடியும். ஸ்ட்ரீம் நிறுவனங்கள், வீடியோக்களை யார் பார்க்க வேண்டும் மற்றும் நிறுவனத்திலுள் (Organizations) எப்படி பகிர்ந்து கொள்வது (share) மற்றும் என்ன சேனல்களில் பகிர்ந்து கொள்வது என்பதை தீர்மானிக்க உதவும்.

முக்கிய பெருநிறுவன உள்ளடக்கங்களின் பாதுகாப்பினை (secure content) மைக்ரோசாப்டின் அசூர் ஆக்டிவ் டைரக்டரி (Azure Active Directory) வழங்கும். மற்ற‌ வீடியோ பகிரும் பயன்பாடுகளைப் (Video sharing apps) போன்று "ஸ்டிரீம் (Stream)" வீடியோக்களின் சேனல்களைப் பின்பற்றவும் (follow channels) மற்றும் மின்னஞ்சல் வழியாக அவைக‌ளை பகிர்ந்து (share by email), மற்றும் வலைப்பக்கங்கள் வீடியோக்களை உட்பொதிக்கவும் (embed in websites) அனுமதிக்கும்.

மைக்ரோசாப்டின் "ஸ்டிரீம் (Stream)" லைவ் ஸ்ட்ரீமிங் (live stream) செய்யவும் மற்றும் மைக்ரோசாப்டின் பிற‌ பயன்பாடுகளான‌ பவர் ஆப்ஸ் (PowerApps), மைக்ரோசாப்ட் ஃபுளோ (Microsoft Flow), ஷேர்பாயிண்ட் (Sharepoint) மற்றும் ஏனைய‌ வணிக பயன்பாடுகளுடன் ஒருங்கிணைந்து (Integrates with other Microsoft apps) செயல்படும்.